Home தேர்தல்-14 எந்தப் பதவியில் நீடிப்பது? ஆலோசிக்கிறார் அஸ்மின் அலி!

எந்தப் பதவியில் நீடிப்பது? ஆலோசிக்கிறார் அஸ்மின் அலி!

974
0
SHARE
Ad
அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்ற போது…

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை துன் மகாதீர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எந்தப் பதவியில் நீடிப்பது என்பது குறித்து, அவர் பிரதமர் துன் மகாதீரையும், சிலாங்கூர் சுல்தானையும் கலந்தாலோசிக்கவிருக்கிறார்.

இரண்டு பதவிகளிலும் தன்னால் நீடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கும் அஸ்மின் தன்மீது நம்பிக்கை வைத்து அமைச்சர் பொறுப்பை வழங்கிய துன் மகாதீருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.