புத்ரா ஜெயா – எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர்.
இதன் மூலம் இரண்டு இந்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற இந்திய சமுதாயத்தின் நீண்டகாலக் கோரிக்கை மீண்டும் ஒரு முறை நிறைவேறியுள்ளது.
மனித வள அமைச்சராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் முழுமையான பட்டியல் வருமாறு:
துணைப் பிரதமர் – டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் (பிகேஆர் – பண்டான்)
உள்துறை – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் (பெர்சாத்து – பாகோ)
கல்வி – மஸ்லி மாலிக் (பெர்சாத்து- சிம்பாங் ரெங்கம்)
கிராமப்புற மேம்பாடு – ரீனா ஹருண் (பெர்சாத்து – தித்திவாங்சா)
மகளிர் குடும்ப நல மேம்பாடு – டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்
பொருளாதார விவகாரம் – முகமட் அஸ்மின் அலி (பிகேஆர் – கோம்பாக்)
வீடமைப்பு, ஊராட்சி மன்றங்கள் – சுரைடா கமாருடின் (பிகேஆர் – அம்பாங்)
நிதி அமைச்சு – லிம் குவான் எங் (ஜசெக – பாகான்)
போக்குவரத்து – அந்தோணி லோக் (ஜசெக – சிரம்பான்)
தொடர்பு மற்றும் பல்ஊடகம் – கோபிந்த் சிங் டியோ (ஜசெக – பூச்சோங்)