Home தேர்தல்-14 புதிய அமைச்சரவை! அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியைக் கைவிடுவாரா?

புதிய அமைச்சரவை! அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியைக் கைவிடுவாரா?

758
0
SHARE
Ad
அஸ்மின் அலி – மகாதீர் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஆச்சரியமான நபர் – டத்தோஸ்ரீ அஸ்மின் அலி.

சில நாட்களுக்கு முன்னர்தான் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்ட அஸ்மின் அலி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட துன் மகாதீரின் அமைச்சரவைப் பட்டியலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அஸ்மின் அலி இரண்டு முக்கியப் பதவிகளை எவ்வாறு வகிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

புதிய அமைச்சரவை நியமனத்தின் காரணமாக, சிலாங்கூர் மந்திரி பெசார் பொறுப்பிலிருந்து அஸ்மின் அலி விலகப் போகிறாரா என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.

உதாரணமாக, பினாங்கு முதல்வராக இருந்த லிம் குவான் எங் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது முதல்வர் பொறுப்பை சௌ கோன் இயோவுக்கு விட்டுக் கொடுத்தார்.

அதுபோல அஸ்மின் அலியும் தனது மந்திரி பெசார் பொறுப்பை விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.