Home தேர்தல்-14 அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்

அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்

1076
0
SHARE
Ad

கிள்ளான் – சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீண்டும் நேற்று பதவியேற்றார்.

சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கிள்ளான் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான சடங்கில் அவர் மந்திரிபெசாராகப் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பதற்கு முன்னதாக அவர் செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்வார் இப்ராகிமைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#TamilSchoolmychoice

கோம்பாக் நாடாளுமன்றத்திலும், புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அஸ்மின் அலி இரண்டு தொகுதிகளிலும் அபாரமான வெற்றி பெற்றார்.

NEGERI SELANGOR
Parlimen P.098 – GOMBAK
PARTI MENANG PKR
MAJORITI UNDI 48721
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
DATO’ SERI AZMIN ALI (PKR) 75113
Ir. KHAIRIL NIZAM (PAS) 17537
DATUK ABDUL RAHIM KAMARUDIN (BN) 26392

 

கோம்பாக் நாடாளுமன்றத்தில் 48,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அஸ்மின் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத்தில் 25,512 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

NEGERI SELANGOR
DUN N.19 – BUKIT ANTARABANGSA
PARTI MENANG PKR
MAJORITI UNDI 25512
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
SHARIFAH HASLIZAH BINTI SYED ARIFFIN (PAS) 2311
DIVA AA (BEBAS – GAJAH) 90
DATO’ SERI AZMIN ALI (PKR) 30892
SALWA HJ. YUNUS (BN) 5380
AHMAD BIN KAMARUDIN (PRM) 116

 

தான் போட்டியிட்ட தொகுதிகளில் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடியதோடு, பாஸ் கட்சியின் துணை இல்லாமல், அந்தக் கட்சியின் மிரட்டல்கள், அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலைமை ஆகியவற்றுக்கு மத்தியில் சிலாங்கூர் மாநிலத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்திருப்பது, அஸ்மின் அலியின் தலைமைத்துவத்திற்கு சிலாங்கூரில் இருக்கும் செல்வாக்கையும், ஆதரவையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர் கருதுகின்றனர்.

(படங்கள்: நன்றி – அஸ்மின் அலி டுவிட்டர் பக்கம்)