Home உலகம் உலகக் கிண்ணம்: உருகுவே 1 – சவுதி அரேபியா 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: உருகுவே 1 – சவுதி அரேபியா 0 (முழு ஆட்டம்)

805
0
SHARE
Ad

மாஸ்கோ – (ஜூன் 21 – மலேசிய நேரம் அதிகாலை 12.50 நிலவரம்) பலம் பொருந்திய தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே இன்று ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் மோதியது.

முதல் பாதி ஆட்டம் முடிய உருகுவே 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது. உருகுவேயின் கோலை லுயிஸ் சுவாரெஸ் அடித்தார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு குழுக்களுமே கோல் அடிக்க முடியாமல் திணறின.

சவுதி அரேபியாவுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் உருகுவே குழுவினர்
#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 1-0 கோல் எண்ணிக்கையில் இன்றைய ஆட்டத்தில் உருகுவே சவுதி அரேபியாவை வெற்றி கொண்டது.

முதலாவது ஆட்டத்தில் இரஷியாவிடம் 5-0 கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்ட சவுதி அரேபியா இரண்டாவது ஆட்டத்திலும் உருகுவேயிடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் இனி அடுத்த சுற்றுக்குப் போகமுடியாது.

இரஷியாவும் உருகுவேயும் ‘ஏ’ பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறும் இரண்டு நாடுகளாகும்.