Home Video நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் நேர்காணல் (காணொளி)

நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் நேர்காணல் (காணொளி)

2154
0
SHARE
Ad
அருள்குமார் ஜம்புநாதன்

சிரம்பான் – கடந்த மே 9 பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி.

அப்போது முதல் அந்த மாநிலத்தில் இந்திய சமூகத்திற்கு நம்பிக்கை தரும் அதிரடியான பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 20 சட்டமன்றங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது நம்பிக்கைக் கூட்டணி. அதில் 5 பேர் இந்தியர்கள் என்பது இந்திய சமூகம் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய அம்சம்.

#TamilSchoolmychoice

அதன் காரணமாக பினாங்கு மாநிலத்திற்குப் பின்னர் முதன் முறையாக 2 ஆட்சிக் குழு உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது நெகிரி செம்பிலான்.

அது மட்டுமல்ல, பிகேஆர் கட்சியின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் இரவி முனுசாமி நெகிரி செம்பிலான் சட்டமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜசெக சார்பிலான இந்த இரண்டு புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தம்பின் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம்.

மற்றொருவர் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் – அருள்குமார் ஜம்புநாதன்.

முதன் முறையாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கான இலாகா ஒன்றை உருவாக்கி, அதற்கு ஆட்சிக் குழு ஒருவரையும் நியமித்திருக்கிறது, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம்.

அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவர் அருள்குமார்.

செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில் தனது பொறுப்புகள் குறித்தும், நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார் அருள்குமார்.

அவரது நேர்காணலின் காணொளி வடிவத்தை “செல்லியல் அலை” என்னும் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

அடுத்து:

போராட்டத்தில் உதித்த நெகிரியின் அரசியல் முகம் – அருள்குமார் (நேர்காணல்)