Home நாடு மஇகா தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு

மஇகா தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு

1196
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மஇகாவின் வருடாந்திர பொதுப் பேரவை இங்குள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு, அந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாடு முழுமையிலும் இருந்து வருகை தந்திருக்கும் மஇகா பேராளர்களுக்கும், மஇகா தலைவர்களுக்கும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு வழங்கினார்.

அந்த விருந்தில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார். மத்திய செயலவை உறுப்பினர்கள், மஇகா தேசிய உதவித் தலைவர்களும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.