புத்ரா ஜெயா – நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பல்வேறு நிலபேரங்களில் ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும்.
நம்பிக்கைக் கூட்டணி பதவியேற்றதும் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கீழ், கோலாலம்பூர் மாநகரசபை மேற்கொண்ட 97 பரிமாற்றங்களை மறு ஆய்வு செய்ய நடவடிக்கைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த பரிமாற்றங்களில் மொத்தம் 5.63 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 273.27 ஹெக்டர் நிலங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கைக் குழுவின் புலனாய்வுகளுக்கு ஏற்ப தெங்கு அட்னான் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.