Home நாடு கெராக்கான் : புதிய தலைவர் டொமினிக் லாவ் – துணைத் தலைவராக கோகிலன் தோல்வி

கெராக்கான் : புதிய தலைவர் டொமினிக் லாவ் – துணைத் தலைவராக கோகிலன் தோல்வி

1153
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற கெராக்கான் கட்சியின் தேர்தலில் புதிய தேசியத் தலைவராக டொமினிக் லாவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அண்டி யோங் என்பவரை விட சுமார் 300 வாக்குகள் பெரும்பான்மையில் டொமினிக் லாவ் வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னர் கெராக்கான் கட்சியின் உதவித் தலைவராக டொமினிக் லாவ் பதவி வகித்து வந்தார்.

டொமினிக் லாவ்

பதவி விலகிச் செல்லும் மா சியூ கியோங்கிற்குப் பதிலாக டொமினிக் லாவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கட்சியின் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் முன்னாள் உதவித் தலைவரான ஏ.கோகிலன் பிள்ளை தோல்வியைத் தழுவினார். டொமினிக் லாவ் அணியின் சார்பாகப் போட்டியிட்ட பினாங்கு மாநிலத் தலைவர் ஓ தோங் கியோங் கட்சியின் புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏ.கோகிலன் பிள்ளை

கெராக்கான் கட்சியின் மூன்று உதவித் தலைவர்களாக பல்ஜிட் சிங், சுங் வீ ஹிங், கூ ஷியாவ் லீ ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 31 சட்டமன்றத் தொகுதிகளிலும் கெராக்கான் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து அப்போதைய தலைவர் மா சியூ கியோங் பதவி விலகினார்.

தேசிய முன்னணியிலிருந்து விலகும் அதிரடி முடிவையும் கெராக்கான் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துணிச்சலுடன் எடுத்தது.