உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்தப் பேரணி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் மைதானத்தில், பிரதமர் துன் மகாதீர் தலைமையில் நடத்தப்படவிருந்தது.
காவல் துறையினரின் அறிவுரையின்படி தாங்கள் இந்தப் பேரணியை இரத்து செய்ய முடிவு செய்ததாக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்தப் பேரணி பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றும் ரசாலி இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஐசெர்ட் பேரணி குறித்து நேற்று வெள்ளிக்கிழமை காணொளி ஒன்றின் வழி தனது வலைத் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ஜனநாயக முறைப்படி ஐசெர்ட்டுக்கு எதிரானப் பேரணி நடத்தப்பட வேண்டுமென சில தரப்புகள் விரும்பியதால் நாங்கள் அதனை அனுமதித்தோம் என்று தெரிவித்தார்.
“திட்டமிட்டபடி ஐசெர்ட் பேரணி நடத்துங்கள். ஆனால், அமைதியாக, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடத்துங்கள். பேரணி நடக்கும் இடத்தில் குப்பை போட்டு அசுத்தப்படுத்தாதீர்கள்” என்றும் மகாதீர் அந்தக் காணொளியின் வழி ஆலோசனை கூறியுள்ளார்.