சபாவில் பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினங்களில், ஆமைகளும் ஒன்று. இவ்வாறான செயல்களினால் வன விலங்குகளுக்குப் பாதுகாப்பு இல்லாத தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என சபா மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான லியூ கூறினார்.
சுற்றுலாப் பயணிகளை சபா மாநிலத்திற்கு பெருமனத்துடன் வரவேற்பதாகவும், அதே நேரத்தில் அவ்வாறு வருகைப் புரியும் சுற்றுலாப் பயணிகள் சபாவின் வன பாதுகாப்புச் சட்டத்தை மதித்து செயல்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அந்தப் படகு ஓட்டுனரையும் விசாரிக்க உள்ளதாக லியூ கூறினார்.