செமினி: நெடுங்காலமாக நீண்டுக் கொண்டே போகும் செமினி தோட்டத் தமிழ் பள்ளியின் விவகாரத்தை தீர்வு காண்பதற்கு, செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குக் கிடைக்கப்பட்ட வாய்ப்பு என மஇகா கட்சித் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
பத்து வருடங்களுக்கு மேலாக இப்பள்ளி நிருவாகத்திற்கும், சைம் டார்பி நிறுவனத்தினருக்கும் ஏற்பட்டு வரும் நிலப் பிரச்சனையில் தலையிட்டு, சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதற்கோர் தீர்வைக் காண வேண்டும் என அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசு பல வாக்குறுதிகளைக் கொடுத்து உள்ளது. ஆயினும், இந்தப் பள்ளி குறித்து இது வரையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
மஇகா கட்சி மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்த பொழுது, இந்தப் பிரச்சனைக் குறித்து சைம் டார்பி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தது, ஆயினும், தீர்வுக் காணும் நிலையில், தேர்தலில் மாநில அரசு மாற்றப்பட்டது என அவர் விவரித்தார்.