Home நாடு ஜசெக பெறும் வெளிநாட்டு நிதியை விசாரிக்க வேண்டும்! -பாஸ்

ஜசெக பெறும் வெளிநாட்டு நிதியை விசாரிக்க வேண்டும்! -பாஸ்

748
0
SHARE
Ad

கோத்தா பாரு: பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படுவதை விட, ஜசெக கட்சி வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி மிகவும் ஆபத்தானது என பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் நேற்று (வியாழக்கிழமை) கூறினார்.

இன்டர்நேஷனல் ரிபாப்லிகன் இன்ஸ்டிடுட் (International Republican Institute) நிறுவனம் இதனை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது என அவர் சுட்டிக் காடினார். இம்மாதிரியான சூழல்கள் வெளிநாடுகளின் தலையீட்டை இந்நாட்டில் கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணையைத் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், நம்பிக்கைக் கூட்டணி அரசு பெறும் வெளிநாட்டு நிதிகளைக் குறிப்பாக விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.