Home நாடு ஜசெகவிற்கு எதிரான தாக்குதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டதே!- பாஸ்

ஜசெகவிற்கு எதிரான தாக்குதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டதே!- பாஸ்

891
0
SHARE
Ad

கோத்தா பாரு: ஜசெக கட்சிக்கு முறனாக நடந்து கொள்வதில் எவ்வித தவறுமில்லை என பாஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக மலேசியா கினி செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகப்படிதான் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இது ஓர் உடல் மோதலும் விரோதமும் அல்ல, மக்களின் மனதை கவரும் செயல்பாட்டுக்கு தொடுக்கப்பட்ட ஒரு போராட்டம்” என அவர் தெரிவித்தார்.

ஜசெகவின், பாஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகவே அக்கட்சி, ஜசெகவின் மீது சீற்றம் கொண்டு ஜனநாயக அடிப்படையில் தாக்குதல்களைக் கொடுத்து வருகிறது என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி மத அடிப்படையில், தமது மதக் கடமைகளை செயல்பட விரும்புகிறது. ஆனால், அதனை தடுத்து நிறுத்த ஜசெக முற்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.