Home நாடு சுங்க கட்டணம் குறைப்பு – விரைவில் அறிவிக்கப்படும்!- மொகிதின்

சுங்க கட்டணம் குறைப்பு – விரைவில் அறிவிக்கப்படும்!- மொகிதின்

972
0
SHARE
Ad

செமினி: சுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிவிக்கும் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுவிட்டதாவவும், கூடிய விரைவில், சம்பந்தப்பட்ட அமைச்சரால் இந்த அறிவிப்பு செய்யப்படும் எனவும் அவர் கூறினார். ஆயினும், உள்துறை அமைச்சருமான மொகிதின், இது குறித்து விரிவாக ஏதும் விவரிக்கவில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் போது, குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணங்களை அகற்றும் எனவும், ஒரு சில இடங்களில் அதனை குறைக்கவும் முற்படும் எனவும் நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்ததை குறித்து அவர் இவ்வாறு பேசினார். இந்த விவகாரம் குறித்து, நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.