இந்த வழக்கு சம்பந்தமான இம்மூவரின் நடவடிக்கைகளும் கேமரா மூலம் பதிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நடுவர்கள் குழுவின் எந்தவித உரையாடல் விவரங்களை செய்தியாக எந்தவொரு ஊடகங்களும் வெளியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நடவடிக்கைகளின் போது ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அக்குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் குழுவினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எட்டு வாரங்களுக்குள் இக்குழுவினர் மொத்தமாக தங்களின் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை, இந்த பேச்சுவார்த்தைக்கு கூடுதல் உறுப்பினர்கள் தேவைப்பட்டால் அதனை அக்குழுவினரே நியமித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.