இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தது சரியான செயல் என்றும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஜய்ஷ்-இ- முகமட் அமைப்பின் மீது, ஐநா விதித்திருக்கும் தடையை அகற்றக் கோரும், சீன அரசு பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தில் துணையாக இருந்து செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
மார்ச் 5-ஆம் தேதி இரண்டு தீவிரவாதக் குழுவுடன் சேர்த்து, பல பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் இதுவரையிலும் தடை செய்துள்ளது. ஆயினும், அதே நேரத்தில் அதன் சொந்த எல்லைக்குள் இன்னும் ஒரு சில தீவிரவாத செயலில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதை அவர்கள் காத்து வருகிறார்கள். இதுவே, அனைத்துலக சமூகம் பாகிஸ்தானை தனிமைப் படுத்துவதற்கான காரணமாக அமைகிறது என அவர் கூறினார்.
அண்மையில், மசூத் அசார் சகோதரர் உட்பட, ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பின் 44 தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் தடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த தடுத்து வைப்பு எவ்வாறு கையாளப்படப் போகிறது என தெளிவாகப் புலப்படவில்லை என அவர் கூறினார்.
கூடிய விரைவில் மசூத் அசார் மீதான நடவடிக்கை தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த பெரா, அவ்வாறு செயல்பட தவறினால் பாகிஸ்தான் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.