Home நாடு கிரிஸ்ட்சர்ச் தாக்குதல்: அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி!

கிரிஸ்ட்சர்ச் தாக்குதல்: அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி!

805
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும், கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாதத்தில் உயிரிழந்தவர்களுக்கான சிறப்பு அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி தந்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவாவின் கோரிக்கைக்கு இணங்கி காவல் துறை இந்த முடிவினை எடுத்துள்ளதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் கூறினார்.

ஆயினும், இந்த கூட்டம் காலை 7.30 மணியளவில் தொடங்கப்பட்டு காலை 11.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.  நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மலேசிய இளைஞர் ஒருவர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கூட்டதின் போது, அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும், சின்னமும் இடம்பெறக்கூடாது என முஜாஹிட் கேட்டுக் கொண்டார்.