Home நாடு வாக்களிக்கும் வயதினை 18-க்கு குறைக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

வாக்களிக்கும் வயதினை 18-க்கு குறைக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயது வரம்பை 21 வயதிலிருந்து, 18 வயதிற்கு குறைக்கும் பரிந்துரையை வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற அமர்வில் முன்மொழியப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் தெரிவித்தார்.

இதற்காக அரசியமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளதால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.

தற்போதைய, கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி 21 வயதைநிரம்பிய ஒருவர் வாக்களிக்கும்தகுதியைப் பெற்றுள்ளவராகிறார்.

#TamilSchoolmychoice

இளைஞர்கள் எதையும் தைரியமாக சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும், எந்த ஒரு சவாலையும் கண்டு பயப்படக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.