Home நாடு நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணைக்கு மேல் ஆட்சி செய்யும்!- தெரெசா கொக்

நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணைக்கு மேல் ஆட்சி செய்யும்!- தெரெசா கொக்

960
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: பலரது கருத்து போல் நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டும் ஆட்சி நடத்தும் அரசாக இருக்காது என தொழிற்துறை அமைச்சர் தெரெசா கொக் தெரிவித்தார்.

பல்வேறு விவகாரங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசு வாக்குறுதி அளித்தது போல் நடந்துக் கொள்ளாத நிலை மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன், தொடர் தாக்கமான நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தோல்வி அடைந்து வருவதாகவும் பலர் கருதுகின்றனர்.    

அரசாங்கத்தின் நிருவாகத்தில் ஒரு சில வேறுபாடுகளைக் காட்டிய பின்னர், மீண்டும் மக்கள் நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கைக் கொள்வர் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சில ஆதரவாளர்கள் குறுகிய காலத்திலே எல்லா மாற்றத்தையும் எதிர்பார்ப்பதால், இந்த சூழல் ஏற்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

மோசமான பொருளாதாரத்திற்காக மக்கள் குற்றம் சாட்டுகிறார்களானால், அது உலகப் பொருளாதாரத்தை ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா நாட்டிற்கு இடையிலான பொருளாதார யுத்தக் காரணமே தவிர, வேறொன்றுமில்லை என தெரெசா கூறினார். இதனால், மற்றநாடுகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.