Home நாடு மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!

1242
0
SHARE
Ad
சைபுடின் நசுத்தியோன் – பிகேஆர் தலைமைச் செயலாளர்

கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின் நசுதியோன், அவ்வமைப்பின் கருத்துக் கணிப்பில் முன்வைக்கப்பட்ட சரிவுக்கான காரணங்களில் தமக்கு உடன்பாடு இருந்தாலும்,  அது வெளியிட்டுள்ள விழுக்காடு மதிப்புடன் தாம் உடன்படவில்லை எனக் கூறினார்.

பொருளாதார ரீதியாக மக்கள் 40 விழுக்காடு மட்டுமே நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த காரணத்திற்காக நம்பிக்கைக் கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு 56 விழுக்காடாகும்.

#TamilSchoolmychoice

பொருளாதாரம் காரணமாக அதிருப்தி அடைந்த மக்களின் எண்ணிக்கை 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதே நிலைமை தொடர்ந்தால் நம்பிக்கைக் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லாத சூழல் ஏற்பட்டு விடும் என அது எச்சரித்துள்ளது.

1,204 பேர் பங்குக் கொண்ட இந்த கருத்துக் கணிப்பில், முக்கியமாக முன்வைக்கப்பட்ட மூன்று காரணங்களில், பணவீக்கம் (54 விழுக்காடு), ஊழல் (23 விழுக்காடு), மலாய்க்காரர்களின் உரிமை அல்லது சமமான உரிமை (23 விழுக்காடு) அடங்கும்.

ஆயினும், இந்த கருத்துக் கணிப்பினை நம்பிக்கைக் கூட்டணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது எனவும், இதற்கு தகுந்தபடியான வழிமுறைகளை கண்டறிந்து மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் எனவும் சைபுடின் கூறினார்.