இந்த விவரங்களை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின் (படம்) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த வணிக உடன்பாடுகளில் தூய்மையான எரிசக்தி, பசுமைத் தொழில்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனவும் இயோ கூறினார்.
துபாய் எக்ஸ்போவில் மலேசியாவின் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட முகப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இயோ தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக சுமார் 60 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்றும் இந்தத் தொகையின் பெரும் பகுதியை தனியார் நிறுவனங்கள் செலவிடும் என்றும் இயோ மேலும் தெரிவித்தார்.