Home நாடு “எந்த எதிர்பார்ப்புமின்றி புக்கிட் சாகார் நிலத்தை தர தயார்!”- ஜோகூர் சுல்தான்

“எந்த எதிர்பார்ப்புமின்றி புக்கிட் சாகார் நிலத்தை தர தயார்!”- ஜோகூர் சுல்தான்

975
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: புக்கிட் சாகாரில் உள்ள தனது நிலத்துடன் இணைக்கப்படுவதால் ஆர்டிஎஸ் திட்டத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன என செய்திகள் வெளியானது குறித்து ஜோகூர் சுல்தான் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அத்திட்டத்திற்காக தனது நிலமானது பயன்படுத்தப்பட உள்ளது என தமக்கு எந்த தரப்பினரும் தெரிவிக்கவில்லை என அறிக்கை ஒன்றின் வாயிலாக இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

அப்படி ஒருவேளை புக்கிட் சாகாரிலுள்ள தமது நிலம், ஆர்டிஎஸ் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் எந்தவொரு பணமும் பெறாமல் மத்திய அரசாங்கத்திற்கே அந்நிலத்தை வழங்குவதில் தமக்கு மகிழ்ச்சி என்றே சுல்தான் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று திரும்பும் மக்களின் வேதனைகளை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, புக்கிட் சாகார் நிலம் ஜோகூர் அரண்மனைக்கு சொந்தமான நிலமாக இருந்தால் அதனை மத்திய அரசாங்கம் மீண்டும் பெற்றுக் கொள்ளும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.