Home நாடு நஜிப்பின் டத்தோஶ்ரீ, டத்தோ பட்டங்கள் பறிப்பு!- சிலாங்கூர் அரண்மனை

நஜிப்பின் டத்தோஶ்ரீ, டத்தோ பட்டங்கள் பறிப்பு!- சிலாங்கூர் அரண்மனை

1252
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பட்டங்களை தற்காலிகமாக பறிக்க சிலாங்கூர் சுல்தான் ஷாராபூடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக அவரது செயலர் முகமட் அமின் அகமட் ஹயா தெரிவித்தார்.

கடந்த மே 6-ஆம் தேதியிலிருந்து இது நடப்புக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

#TamilSchoolmychoice

2004-ஆம் ஆண்டில், கெஹாலியான் டார்ஜா கெபெசாரான் ஶ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்) எனப்படும் டத்தோஶ்ரீ”அழைப்பைக் கொண்டபட்டமானது அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டில் டார்ஜா கெபெசாரான் டத்தோ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (டிபிஎம்எஸ்) எனப்படும் “டத்தோ” அழைப்பைக் கொண்ட பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் பணமோசடி போன்ற பல குற்றங்கள் அவர் மீது நிலுவையில் உள்ளதால் இவ்விரு பட்டங்களும் பறிக்கப்படுகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இந்த பட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் முகமட் அமின் குறிப்பிட்டிருந்தார்.