காஜாங்: நேற்று வெள்ளிக்கிழமை நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் போது பிரதமர் மகாதீருடன் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப் பேச்சாளர் சாம்ரி வினோத் உடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பரவலாக சமூகப்பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதைக் கண்டு இந்தியர்கள் ஏமாற்றமும் வருத்தமும் கலந்த கருத்துகளை சமூகப்பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாம்ரி வினோத் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் நிலைப்பாடுதான் என்னவென்று கேள்விகள் கேட்டு உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு சாம்ரி வினோத்திற்கு பிரத்தியேகமாக அழைப்பு விடுக்கப்பட்ட அழைப்பு அட்டையின் படம் ஒன்றும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
“நம்பிக்கைக் கூட்டணியா, அல்லது, நம்பி கெட்ட கூட்டணியா” எனும் ஹேஷ்டேக்குடன் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காஜாங்கில் அமைந்துள்ள தெனெரா தங்கும் விடுதியில் பெர்கிம் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.