Home இந்தியா மத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக! கவிழுமா கமல்நாத் ஆட்சி!

மத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக! கவிழுமா கமல்நாத் ஆட்சி!

1063
0
SHARE
Ad

போபால் – நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக அடுத்த அங்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடும் எனக் கருதப்படுகிறது.

29 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 114-ஐ வென்றது. ஆட்சி அமைக்க 115 தொகுதிகள் தேவைப்படும் என்ற நிலையில் இரண்டு தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியை வென்ற சமஜ்வாடி கட்சி, மற்றும் 4 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும் (படம்) முதலமைச்சரானார்.

#TamilSchoolmychoice

ஆனால், ஒரே வருடத்தில் காட்சிகள் தலைகீழாக மாறியுள்ளன. தற்போது 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 28-ஐ கைப்பற்றியுள்ள பாஜக பக்கம் இந்த சுயேச்சைகளும் சிறிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தால், இயல்பாகவே பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் ஆட்சி மத்தியப் பிரதேசத்தில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது.