Home நாடு சிறைச்சாலை மரணங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்!- ராயிஸ் யாட்டிம்

சிறைச்சாலை மரணங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்!- ராயிஸ் யாட்டிம்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்கள் குறித்து அரசாங்கம் கூடிய விரைவில் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து நன்முறையிலான தீர்வினை வழங்க வேண்டும் என நெகிரி செம்பிலான் பெர்சாத்து கட்சித் தலைவர் ராயிஸ் யாட்டிம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் மரணமுற்ற எம். புருசோத்தமன் குறித்து கூறுகையில், சிறைச்சாலை கைதிகளின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.   

காவலில் இருக்கும்போது கைதிகளில் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் 26 வயதான, புருசோத்தமனின் மரணமும் அதில் அடங்கும். மக்களின் குரல் செவிமடுக்கப்பட்டே ஆக வேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

சிறைச்சாலையில் மருத்துவம், சுகாதாரம், உணவு, சிகிச்சை, மற்றும் அதிகாரிகளின் நடைமுறை போன்ற விவகாரங்கள் கேள்விக்குடுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, லோயார்ஸ் அப் லிபர்ட்டி அமைப்பு, கடந்த சனிக்கிழமை இறந்த புருசோத்தமன் மரணம் குறித்து விசாரிக்கக் கோரி அமலாக்கப் பிரிவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

புருசோத்தமன் காச நோயினால் அவதியுற்று வந்த நிலையில், அவர் நினைவின்றி இருக்கும் போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என அது குறிப்பிட்டிருந்தது. மலேசியாவில் சிறைச்சாலை நிலைமைகள் தொடர்பான பிரச்சனை நீண்டகாலமாக சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டதுடன், அதனை கூடிய விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கத்தை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.