தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து 47.1 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 248 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
இன்று வியாழக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments