Home உலகம் கிரிக்கெட் : 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது நியூசிலாந்து

கிரிக்கெட் : 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது நியூசிலாந்து

1257
0
SHARE
Ad

இலண்டன் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இங்குள்ள ஓவல் அரங்கில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த வங்காளதேசக் குழுவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து 47.1 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 248 ஓட்டங்களை எடுத்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

இன்று வியாழக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.