Home நாடு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் ரோஸ்மாவின் மகன் ரிசா அசிஸ்

நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் ரோஸ்மாவின் மகன் ரிசா அசிஸ்

663
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்கு பிறந்த மகனான ரிசா அசிஸ் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

நேற்று வியாழக்கிழமை அவரைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பின்னர் பிணையில் விடுவித்தது.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீபா கோயா இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அம்லா எனப்படும் கள்ளப் பணப் பரிமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் (Amla – Anti-Money Laundering, Anti-Terrorism Financing and Proceeds of Unlawful Activities Act) கீழ் அவர் குற்றம் சாட்டப்படுவார்.

ரிசா அசிஸ் யார் என்பதை விளக்கும் பெர்னாமா வரைபடம்

ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) என்ற ஆங்கில படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

இந்த நிறுவனம்தான் ‘தெ வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தை, லியோர்னாடோ டி காப்பிரோவைக் கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தது.

1எம்டிபியில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் ரெட் கிரானைட் நிறுவனம் ஆங்கிலப் படத் தயாரிப்பில் முதலீடு செய்தது என்பதுதான் ரிசா அசிஸ் மீதான ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கான அடிப்படையாகும்.

இந்தப் படத்திற்காக பெற்ற சம்பளத்தை லியோர்னாடோ டி காப்பிரோ அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறைக்குத் திருப்பிக் கொடுத்து விட்டார். ரிசா அசிசும் தனது நிறுவனப் பணத்தில் இருந்து கணிசமானத் தொகையை அமெரிக்கா அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறார்.