Home நாடு “ஜோ லோ என்னை நஜிப்பின் வீட்டினுள் அழைத்து சென்றார்”- சாட்சி

“ஜோ லோ என்னை நஜிப்பின் வீட்டினுள் அழைத்து சென்றார்”- சாட்சி

829
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2011-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முன்னாள் அம்பேங்க் குழும நிருவாக இயக்குனர் சியா தெக் குவாங் நஜிப் ரசாக்கின் தனியார் இல்லத்திற்கு வங்கி கணக்கைத் தொடங்குவதற்காக சென்றிருந்ததாகத் தெரிவித்தார்.

அங்கு அவரை தொழிலதிபர் ஜோ லோ வரவேற்றதாக சியா கூறினார். பின்னர் அவரை நஜீப் வீட்டினுள் அழைத்து சென்று சந்திப்பதற்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஜோ லோ அவரை நஜிப்பிடம் அறிமுகப்படுத்தி, ஒரு வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கத் தொடங்கியதாக சியா கூறினார்.

#TamilSchoolmychoice

நஜிப்பிடம் வெற்று தாட்கள் மற்றும் கடன் பற்று அட்டைகளை கொடுத்ததாகவும் சியா கூறினார்.

சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த சந்திப்பு நடந்ததாக அவர் தெரிவித்தார்.

பினாங்கில் பிறந்த ஜோ தொழிலதிபர் ஜோ லோ 1எம்டிபி விசாரணைகளுக்காக மலேசிய அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.