Home One Line P1 “நான் வெளியேற வேண்டுமெனில், முதலில் வந்த சீனர்கள் வெளியேறட்டும்”- ஜாகிர் நாயக்

“நான் வெளியேற வேண்டுமெனில், முதலில் வந்த சீனர்கள் வெளியேறட்டும்”- ஜாகிர் நாயக்

1509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் சீன மலேசியர்களைப் பற்றி கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தாம் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், இந்நாட்டிற்குச் சொந்தமில்லாத சீனர்களும் வெளியேற வேண்டும் என்று கருத்துரைத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கிளந்தானில் நடந்த உரையின் போது, இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்நாட்டு இந்தியர்கள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை காட்டிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது அதிக விசுவாசத்துடன் இருப்பதாக கூறியிருந்தார். ஆயினும், தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.  

மலேசியா முழு முஸ்லீம் நாடாக மாறியது. பிறகு, சீனர்கள் வந்தார்கள், இந்தியர்கள் வந்தார்கள், பிரிட்டிஷ் வந்தார்கள். அவர்கள் புதிய விருந்தினர்கள். யாரோ ஒருவர் என்னை விருந்தினர் என்று அழைத்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே, எனக்கு முன், சீனர்கள் விருந்தினர்களாக வந்தவர்கள். ஆகவே, புதிய விருந்தினர் முதலில் செல்ல விரும்பினால், பழைய விருந்தினரை திரும்பிச் செல்லச் சொல்லுங்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக ஜாகிரை இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப இயலாது என்றும், விருப்பப்பட்டால் வேறு நாடுகளுக்கு, அந்நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுவார் என்றும் பிரதமர் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.