Home 13வது பொதுத் தேர்தல் தெலுக் கெமாங் தொகுதியில் வி.எஸ்.மோகன் போட்டி? சோதிநாதன் நிலை கேள்விக்குறி

தெலுக் கெமாங் தொகுதியில் வி.எஸ்.மோகன் போட்டி? சோதிநாதன் நிலை கேள்விக்குறி

895
0
SHARE
Ad

Sothi---Featureஏப்ரல் 5 – நீண்டகாலமாக தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு இப்போது டத்தோ வி.எஸ்.மோகன் என்ற பதில் கிடைத்துள்ளது.

தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் வி.எஸ்.மோகன் போட்டியிடவுள்ளார் என்றால் இந்த தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்த தொகுதிக்கு குறிவைத்து பாடுபட்டு வந்த டத்தோ சோதிநாதனின் நிலை என்ன என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

உள்ளூர்க்காரர் என்பதால் தனக்கே இந்த தொகுதி தரப்பட வேண்டும் என நெருக்குதல்கள் தந்து வந்த சோதிநாதனின் செல்வாக்கை இந்த தொகுதியில் முறியடிக்கும் வண்ணம் இன்னொரு உள்ளூர்க்காரரான வி.எஸ்.மோகனை ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் நிறுத்தியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

தெலுக் கெமாங்கைச் சேர்ந்த வி.எஸ்.மோகன் நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக தற்போது பணியாற்றி வருகிறார்.  அவர் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்றால் அவரின் சட்டமன்றத் தொகுதிக்கும், போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதே வேளை துடிப்பான இளம் அரசியல் தலைவர் என்று கூறப்படும் சோதிநாதனின் அரசியல் நிலைமை இனி  என்னவாகும்?

அவருக்கு இந்த பொதுத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் அவரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் வி.எஸ்.மோகன் தெலுக் கெமாங் நாடாளுமன்றத்தில் நிறுத்தப்படும் வேளையில் பிரச்சாரத்தின் போது சோதிநாதன் ஆதரவு வழங்குவாரா?

அல்லது எதிர்ப்பு தெரிவிப்பாரா?

அல்லது பிரச்சாரத்தில் பங்கேற்காமல் விலகி நிற்பாரா?

என்று தெலுக் கெமாங் ம.இ.கா  வட்டாரங்களில் கேள்விகள் எழும்பியுள்ளன.

மேலும் சோதிநாதனுக்கு  வாய்ப்பு  வழங்கப்படவில்லை என்றால் அரசியலில் இருந்து முற்றாக விலகி விடுவாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.