Home One Line P1 “மக்கள் என்னை நியமித்துள்ளனர், நான் தொடர்ந்து பணியில் இருப்பேன்!”- யோங்

“மக்கள் என்னை நியமித்துள்ளனர், நான் தொடர்ந்து பணியில் இருப்பேன்!”- யோங்

742
0
SHARE
Ad

ஈப்போ: தனது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்திய பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவின் கருத்துக்கு பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்  பவுல் யோங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நான் இன்னும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் குற்றவாளி அல்ல, ”என்று இன்று வெள்ளிக்கிழமை காலை ஈப்போ அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து பணியாற்றுவாரா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக! மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளனர். நான் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். நான் ஏன் விடுப்பில் செல்ல வேண்டும்? ”என்று அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தண்டனைச் சட்டம் 376-இன் கீழ் தனது முன்னாள் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் திரோனோ சட்டமன்ற உறுப்பினருமான யோங் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினராக யோங்கின் பணியில் தாம் திருப்தி அடைவதாக நேற்று வியாழக்கிழமை பைசால் கூறினார்.

இருப்பினும், சட்ட நடைமுறைகளைப் பொறுத்தவரை, யோங் தனது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுபடுமாறு அறிவுறுத்தினேன். வழக்கு முடிவடையும் வரை முடிவெடுக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறேன்” என்று பைசால் மேலும் கூறியிருந்தார்.

இதனிடையே, தம்மை இந்த வழக்கில் வேண்டுமனே சிக்க வைத்தது யாரென்று தமக்குத் தெரியும் எனவும், சரியான ஆதாரங்கள் இல்லாததால் தற்போதைக்கு அதனை வெளியிட விரும்பவில்லை என்றும் யோங் குறிப்பிட்டிருந்தார்.