Home One Line P1 சரவாக்: ஶ்ரீ அமானில் காற்று மாசுபாடு மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியது!

சரவாக்: ஶ்ரீ அமானில் காற்று மாசுபாடு மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியது!

588
0
SHARE
Ad

கூச்சிங்: சரவாக்கில் புகை மூட்டம் மோசமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் மொத்தமாக 1037 பள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது 136 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் 901 தொடக்கப் பள்ளிகளை உள்ளடக்கியது என்று கல்வி துறைத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாநில பேரிடர் மேலாண்மை (ஜேபிபிஎன்) செயலகம் இன்று  காலை 8 மணி நிலவரப்படி, ஸ்ரீ அமானில் காற்று மாசுபாடு குறியீடு 402-ஆக பதிவாகி உள்ளதை உறுதிபடுத்தியது. இது அபாயகரமான பதிவாகும்.

#TamilSchoolmychoice

இன்று, மலேசிய விமானப்படையின் விமானத்தின் உதவியுடன் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.