Home One Line P1 தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை!- அசிசான் ஹாருன்

தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை!- அசிசான் ஹாருன்

606
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் மசீசவின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, வேண்டுமென்றே தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் தேதியை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்ததாக சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹாருன் மறுத்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலை நடத்துவதற்கு 60 நாட்கள் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. 60 நாள் காலம் வருகிற நவம்பர் 23-ஆம் தேதியன்று முடிவடைகிறது.

ஜோகூரின் வார விடுமுறைகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை. முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கடமைப்பட்டிருப்பதால் தேர்தல்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்படக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை ஜோகூரில் வேலை நாள். எனவே, இந்த தேர்தலுக்கு சனிக்கிழமை மட்டுமே பயன்படுத்த முடியும். அன்றிலிருந்து, எட்டு சனிக்கிழமைகள் இடைத்தேர்தலில் நடத்தப்படலாம்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அக்டோபர் 5 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, வாக்களிப்பு அக்டோபர் 19-இல் நடக்கும். இது பொருத்தமானதல்ல, ஏனெனில் அக்டோபர் 5-ஆம் தேதி மறைந்த சுல்தான் இஸ்காண்டாரின் விடுமுறை நாள்.

அக்டோபர் 12 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, வாக்களிப்பு அக்டோபர் 26-இல் நடக்கும் . தீபாவளி அக்டோபர் 27 என்பதால் இதுவும் பொருந்தாது. பிரச்சாரக் காலம் தீபாவளி விடுமுறை நாட்களிலும் இருக்கும்என்று அசார் கூறினார்.

அக்டோபர் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியும் வாக்களிப்புக்கு பொருத்தமான தேதியாக இல்லை. ஏனென்றால், தீபாவளி விடுமுறை நாட்களிலும் பிரச்சாரக் காலம் உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்குப்பதிவு நாள் நவம்பர் 2-ஆம் தேதி என்றால், முதற்கட்ட வாக்குப்பதிவு தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 28-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா, தேர்தல் ஆணையத்தின், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான தேதி நிர்ணயம் குறித்து அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

தேதியைத் தேர்ந்தெடுப்பதில் தேர்தல் ஆணையம் உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் தேதி மற்றும் கட்சியின் பொதுக் கூட்டமும் ஒரே தேதியில் இருப்பதாக மசீச கேள்வி எழுப்பியிருந்தது.