Home நாடு “மக்களவை பிரதிநிதிகளுக்கு அக்கறை இல்லையெனில் நாடாளுமன்றத்தை கலைக்கவும்!”- சப்ரி யாக்கோப்

“மக்களவை பிரதிநிதிகளுக்கு அக்கறை இல்லையெனில் நாடாளுமன்றத்தை கலைக்கவும்!”- சப்ரி யாக்கோப்

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை மக்களவையில் நடந்த விவாதத்தில் பல நாடாளூமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகையில், 2020-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அமரத் தவறியது, அவர்கள் கூறப்படுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்திற்கு இதுகறுப்பு வரலாறுமற்றும்துரதிர்ஷ்டவசமானதருணங்கள் என்று இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்

#TamilSchoolmychoice

இன்று ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. 222 பேரில் 26 பேர் பிரதிநிதிகள் மக்களவையில் இல்லாதபோது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கறுப்பு வரலாறு நான் நினைக்கிறேன். நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக் கூட்டத்தில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. பிரதிநிதிகள் மக்களவை விவாதத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாடாளுமன்றத்தை கலைக்க நான் முன்மொழிகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.