தஞ்சோங் பியாய்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமையும் என்று பாஸ் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
அந்த காரணத்திற்காக, தனது கட்சி மசீச வேட்பாளரான டாக்டர் வீ ஜெக் செங்கிற்கு வலுவான ஆதரவை அளிக்கிறது என்று ஹாடி கூறினார். சமாதானத்தின் அடிப்படையில், தேசிய முன்னணி மற்றும் பாஸ் இடையிலான ஒன்றிணைப்பு மூலம் ஒன்றுபடலாம் என்பதை பொதுமக்களுக்கு உணர வைக்கும் தருணம் இது என்று அவர் கூறினார்.
“தஞ்சோங் பியாயில் பாஸ் மசீசவுகாக ஆதரிப்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். தஞ்சோங் பியாய் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது சிறிய தேர்தல் அல்ல, பெரியது, அதாவது வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான சமிக்ஞை.”
“இப்போது நாம் எதிர்க்கட்சியினராக மலாய்க்காரர்கள் மட்டுமே பெரிய அளவில் இருக்கிறோம். முஸ்லிம்கள் அல்லாத இடங்களும் நமக்கு இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணி மக்களைத் தூண்டும் விதத்தை பொதுமக்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஹாடி கேட்டுக் கொண்டார்.
“இங்கு இருக்கும் கட்சிகள் அனைத்தும், அவர்கள் சுதந்திரம் அடைந்தபோது, நிச்சயமாக கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கவில்லை. அனைத்து கட்சிகளும் (பாஸ், அம்னோ, மசீச, மஇகா) கருத்தியல் ரீதியாக வேறுபட்டவை என்றாலும், நாங்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர்கள், “என்று அவர் மேலும் கூறினார்.