Home One Line P1 “அஸ்மின், பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது அரசியல் காரணமாக இல்லை!”- மரியா சின்

“அஸ்மின், பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது அரசியல் காரணமாக இல்லை!”- மரியா சின்

820
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலிக்கும் இடையிலான சந்திப்பில் நாட்டின் பொருளாதாரக் கொள்கை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மரியாவும் அடங்குவார்.

நாங்கள் பொருளாதாரக் கொள்கை குறித்து வழக்கமான விவாதங்களை மட்டுமே நடத்தினோம். பிகேஆருடன் தொடர்புடையது அல்ல. பொருளாதாரக் கொள்கை அரசியல் இல்லையே?”

#TamilSchoolmychoice

பொருளாதார அமைச்சருடன் நாம் பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்க முடியாதா? இது நேற்றிரவு அஸ்மின் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடந்த சந்திப்புக்குப் பிறகுதான் நடந்தது. ஆனால், நான் அங்கு இல்லைஎன்று மரியா நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அம்னோ துணைத் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் உட்பட 20-க்கும் மேற்பட்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை அஸ்மின் கடந்த திங்கட்கிழமை இரவு புத்ராஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த 24 மணி நேரத்திற்குள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த கூட்டம் குறித்து பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைமைத்துவத்திற்கு அஸ்மின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அஸ்மினின் இந்த சந்திப்பு நேற்று சர்ச்சையைத் தூண்டியது. இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த அஸ்மின், அக்கூட்டமானது சாதாரணமான சந்திப்புக் கூட்டம் என்றும் அதனைப் பெரிதுபடுத்த வேண்டாமென்றும் கூறியிருந்தார்.