Home One Line P2 மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

698
0
SHARE
Ad

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நியமணம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஏதுவாக நேற்று புதன்கிழமை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகினர்.

அஜித் பவார் மீண்டும் கட்சிக்கு திரும்பியதால், தேவேந்திர பாட்னாவிஸின் ஆட்சியை சுமார் 3 நாட்களில் முடிவுக்கு கொண்டுவர உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேவேந்திர பாட்னாவிஸ் தனது முதல்வர் பதவியையும், அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியையும் துறந்தனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை வியாழக்கிழமை  மும்பை சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார். 

#TamilSchoolmychoice

பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் வலிமையை தீர்மானிக்க உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை (நவம்பர் 27) எத்தரப்பு அதிக பெரும்பான்மை கொண்டிருக்கிறது என்பதனை சோதனை செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அது இரகசிய வாக்குப்பதிவாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது சிவசேனாதேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபிமற்றும் காங்கிரஸின் வெற்றியாக கருதப்பட்டது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமையன்றுமகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை எழுப்பியது. தேவேந்திர பாட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றதோடு, என்சிபி தலைவர் அஜித் பவார் பாஜக தலைவரின் துணை முதலமைச்சராக சேர்ந்தது கிட்டத்தட்ட அனைவரையும் திகைக்க வைத்தது.