Home One Line P2 ஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே!

ஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே!

701
0
SHARE
Ad

வாஷிங்டன் – அகில உலகமும் ஆவலுடன் காத்திருக்க, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்றும் எனினும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

வெள்ளை மாளிகையிலிருந்து, தொலைக்காட்சி வழி நேரலையாகப் பேசிய டிரம்ப், ஈரான் தணிந்து வரும் போக்கைக் காட்டுவதாகவும்,  அமெரிக்கர்கள், ஈராக்கியர்கள் யாரும் ஈரானியத் தாக்குதல்களால் பலியாகவில்லை என்றும் தாக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள் குறைந்த அளவு சேதங்களையே எதிர்நோக்கியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்காவின் முகத்தில் நாங்கள் விட்ட அறை என ஈரான் இஸ்லாமியத் தலைவர் அயத்தோல்லா காமெனெய் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஈரானுக்கு எதிராக நிதித் துறையிலும் பொருளாதாத் துறையிலும் உடனடியாக தடைகள் விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

உலகிலேயே சிறந்த இராணுவ ஆயுதங்களைக் அமெரிக்கா கொண்டிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறிய டிரம்ப் இராணுவ வலிமையும், பொருளாதாரமுமே நம்மிடமிருந்து எதிரியை தற்காக்கும் என்றும் கூறினார்.

டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து ஈரான் விவகாரத்திலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பதட்டம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.