Home One Line P2 டில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு!

டில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு!

729
0
SHARE
Ad

புது டில்லி: டில்லி சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், கடுமையான போட்டிக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) முன்னிலை வகித்து வருகிறது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் 56 இடங்களிலும், 14 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதற்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.

#TamilSchoolmychoice

ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், கடந்த ஆண்டு ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், பாஜகவுக்கு இது மூன்றாவது தேர்தல் பின்னடைவாக அமையும்.