இந்நிகழ்ச்சி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கிடையே நடைபெறும் இலக்கியப் போட்டிகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். எஸ்.பி.எம் மாணவர்களுக்கென நாடகப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், சொற்போர் ஆகிய மூன்று போட்டிகளும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கென கட்டுரை வரையும் போட்டி, கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அனைத்துப் போட்டிகளுமே அவர்களது இலக்கியப் பாடத்தைத் தழுவியே அமைந்திருக்கும். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த வண்ணம் சிறப்பாக நடந்தேற பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
நிகழ்ச்சியின் விபரங்கள் பின்வருமாறு :