Home உலகம் எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

451
0
SHARE
Ad

pakistan_test_fires_001பாகிஸ்தான், ஏப்ரல் 10-சுமார் 900 கி.மீட்டர் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கவல்ல சக்தி வாய்ந்த ‘ஹேட்ப்-4’ ரக ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.

‘ஷாஹீன்-1’ என்றும் அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் இன்றைய சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பாகிஸ்தான் ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்தபடி 60 கி.மீற்றர் வரை பாய்ந்து செல்லக்கூடிய ‘ஹேட்ப்-9’, ஆயிரத்து 300 கி.மீற்றர் தூரம் வரை பாயும் ‘ஹேட்ப்-5’ உள்ளிட்ட ஏவுகணைகளை அந்நாடு இதுவரை சோதித்துள்ளது.

#TamilSchoolmychoice

போர் திட்டங்களுக்கான லெப்டினன்ட் ஜெனரல் தலைவர்(ஓய்வு) காலித் அஹமத் கித்வாய், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து இன்றைய ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.