Home One Line P1 பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் தேமு வேட்பாளராக அறிவிப்பு

பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் தேமு வேட்பாளராக அறிவிப்பு

537
0
SHARE
Ad

குவாந்தான்: ஜூலை 4-ஆம் தேதி சினி இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளராக பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் முகமட் ஷாரீம் முகமட் சின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரும் பெக்கான் அம்னோ தலைவருமான நஜிப் ரசாக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பகாங் மந்திர் பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக வேட்பாளராகக் கருதப்பட்டவர்களில் பெக்கான் அம்னோ இளைஞர் தலைவரான நஜிப்பின் மகன் முகமட் நிசாரும் ஆவார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி தமது வேட்பாளரை நிறுத்தும் என்று கூறியிருந்த நிலையில், இப்போது கொவிட்19 பாதிப்பு நாட்டில் தொடர்ந்து இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அபுபக்கர் ஹாருண் கடந்த மே 6- ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை அடுத்து சினி சட்டமன்றத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.