Home One Line P1 பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா

பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா

598
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத்  தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார்.

“பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள் வரக்கூடாது. இது வெறும் முவாபாக்காட் நேஷனல் (அம்னோ- பாஸ்), பாரம்பரிய கூட்டணிக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா உடனான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்.

“பின்னர் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் உங்களுக்கு அதிக சிக்கல் இருக்காது.

#TamilSchoolmychoice

“ஆனால், நீங்கள் பெர்சாத்துவைக் கொண்டு வந்தால், நாம் மீண்டும் நிலையற்ற ஓர் ஆட்சியை ஏற்படுத்துவோம். அது நம்மை மீண்டும் ஒரு தொந்தரவு நிலைக்கு தள்ளும். யாரும் ஆதிக்க நிலையில் இருக்க மாட்டார்கள், தெளிவான பெரும்பான்மையும் இருக்காது.” என்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மொகிதின் யாசினுக்கு அம்னோ தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் நம்புகிறாரா என்று கேட்டதற்கு, அவர் அதனை ஏற்கவில்லை.

“நான் அப்படி நினைக்கவில்லை. பெரிக்காத்தான் நேஷனலில் இப்போதைய ஏற்பாடு முற்றிலும் நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

“நாம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும்போது, ​​இது ஒரு வித்தியாசமான பந்து விளையாட்டாக மாறும்.” என்று அவர் கூறினார்.

அடுத்த தேர்தலில் அம்னோவின் வாய்ப்புகள் பிரகாசமானவை, ஆனால், பிரதமர் பதவிக்கு சாத்தியமான வேட்பாளரை பெயரிட முடியவில்லை என்று துங்கு ரசாலி நம்புகிறார்.

“இது ஒரு பெரிய கேள்வி. அம்னோவும் தேசிய முன்னணியும், முடிவு செய்ய வேண்டியது, நாட்டை வழிநடத்த நேர்மையான ஒருவர்.

“நேற்று தலைவர்களாக இருந்தவர்கள் தங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மேலும், கறைபடாத புதியவர்களுக்கு வழிவகுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில், 15- வது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிக்க அம்னோ மற்றும் பாஸ் ஒப்புக் கொண்டது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா, பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் மொகிதின் யாசினை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்தினர்.

அண்மையில், ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டதாகவும், பெர்சாத்து தலைவரான அவருக்கு இரண்டு பெரிய மலாய்-முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் அனுவார் தெரிவித்திருந்தார்.

“அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான முவாபாக்காட் நேஷனல் தலைவர்களுடனான சந்திப்பு குழு மட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தது. அதில் மொகிதினை பிரதமராக தொடர்ந்து ஆதரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

“வரவிருக்கும் தேர்தல்களில், இரு கட்சிகளும் பிரதமராக மொகிதினை நியமிக்க அல்லது ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷெரட்டன் நகர்வு’ மூலம் நம்பிக்கைக் கூட்டணி வெளியேற்றப்பட்ட பின்னர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பதிலாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே, புதன்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை பிரதமர் புத்ராஜெயாவில் ஏற்பாடு செய்திருந்தார்.

நாடு மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆட்சி நல்ல முறையில் நடைபெற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.