Home One Line P2 ஷின்சோ அபே உடல் நலக் குறைவினால் பதவி விலகுகிறார்

ஷின்சோ அபே உடல் நலக் குறைவினால் பதவி விலகுகிறார்

664
0
SHARE
Ad

தோக்கியோ : ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (படம்) தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைவினால் பதவி விலகவிருக்கிறார் என ஜப்பானிய அரசு தொலைக்காட்சியான என்எச்கே (NHK) அறிவித்திருக்கிறது.

ஜப்பானின் ஆளும் கட்சியான எல்டிபி கட்சியின் உயர் பொறுப்பாளர்களிடம் பேசியபோது ஷின்சோ அபே பதவி விலகும் தன் எண்ணத்தை வெளியிட்டார் என அவருக்கு நெருக்கமான மற்றொரு தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத் தரப்பு தலைவர்களிடத்திலும் ஷின்சோ அபேயின் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை ஷின்சோ அபே பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துகிறார். கொவிட்-19 பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக இந்த சந்திப்பு நடத்தப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஷின்சோ அபே தோக்கியோவில் உள கெய்யோ பல்கலைக் கழக மருத்துவமனைக்கு வருகை தந்தார். இந்த சம்பவம் ஊடகங்களிலும் அரசியல் பார்வையாளர்களிடத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவரது உடல்நலம் குறித்த ஆரூடங்களுக்கும் அந்த வருகை வித்திட்டது.

2006 முதல் 2007 வரை ஏற்கனவே ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்த ஷின்சோ அபே உடல்நலத்தைக் காரணம் காட்டி அப்போது பதவியிலிருந்து விலகினார். எனினும் 2012-இல் மீண்டும் அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியாக அதிக நாட்களுக்கு ஜப்பானியப் பிரதமராக இருந்த சாதனையை ஷின்சோ அபே சாதித்திருக்கிறார்.