Home One Line P1 நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது

நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது

596
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வாரம் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை முழுமையாக தீர்வுக் காணப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

“ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய திட்டமிடப்படாத நீர் தடை முழுமையாக மீட்கப்பட்டுள்ளன” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“திட்டமிடப்படாத இந்த நீர் விநியோகத் தடை காலத்தில் பயனீட்டாளர்கள் பொறுமையாக இருந்ததற்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. எப்போதும் விவேகத்துடன் தண்ணீரைப் பயன்படுத்துங்கள், ” என்று ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்பு தலைவர் எலினா பசேரி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில்,  சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

50 முதல் 60 வயதுவரையிலான அந்த நால்வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுவர். அந்த நால்வரும் சகோதரர்களாவர்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைதான் தூய்மைக் கேட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். அந்தத் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டதாகவும்,  அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.