Home One Line P1 சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்

சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்

710
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நிலைமை  சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங் மாநகரசபை, கோம்பாக் நில, வட்டார அலுவலகம் ஆகிய தரப்புகளுடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் முன்அறிவிப்பின்றி தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதில் சுமார் 1 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

சில இடங்களில் தண்ணீர் விநியோகம் பொதுமக்களுக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று சொந்த கொள்கலன்களுடன் தண்ணீரைப் பெற்றுச் சென்றனர்.

முதல் கட்டமாக மருத்துவமனைகளுக்கும் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களுக்கும் (டயாலிசிஸ்) தண்ணீர் விநியோகம் மீண்டும் திரும்ப அதிகாரிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.