Home One Line P1 ‘சாஹிட் ஹமிடி தலைவராக செயல்பட வேண்டும்!’- தாஜுடின்

‘சாஹிட் ஹமிடி தலைவராக செயல்பட வேண்டும்!’- தாஜுடின்

892
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஒரு கட்சித் தலைவராக தனது பங்கை உணர வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.

தலைவராக, சாஹிட் கட்சியின் திசையை கட்டுப்படுத்தவும், தீர்மானிக்கவும் வேண்டும். இதனால் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விருப்பப்படி முடிவுகளையோ செயல்களையோ எடுக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

“தலைவர் கட்சியில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விரும்பியபடி செய்ய முடியாது

#TamilSchoolmychoice

“அது அவரது தலைமையில் இருக்க வேண்டும். தலைவர் தனது பங்கையும் பொறுப்புகளையும் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

“அவரது தலைமை சரியாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவரை பின்பற்றுவார்கள். யாராவது பின்பற்றவில்லை என்றால், எங்கே தவறு என்று நாங்கள் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சாஹிட் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்றும் அம்னோ அதன் திசையை இழந்துவிட்டது என்ற கருத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது தாஜுடின் இதனைக் கூறினார்.

மக்களவையில் ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவரின் முயற்சிகளில் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க விரும்பினால் அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தடுத்து நிறுத்த முடியாது என்ற சாஹிட்டின் முந்தைய கூற்றுக்குப் பிறகு அவர் சர்ச்சையில் சிக்கினார். பல அம்னோ தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நேற்று, அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கட்சியை சபாவில் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து , தெளிவான திசையை அமைக்குமாறு சாஹிட்டை வலியுறுத்தினார்.